பிக்பாஸ் 7 சீசன் புதிய அப்டேட்.

குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சி முடிவுக்கு வருவதையொட்டு அடுத்த நிகழ்ச்சி பற்றிய தகவல்கள் வர ஆரம்பித்துவிட்டன. அதாவது நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த பிக்பாஸ் தான்.

கடந்த ஜனவரி மாதம் ஆரம்பத்தில் பிக்பாஸ் 6வது சீசன் முடிவுக்கு வந்தது, அந்த சீசனின் வெற்றியாளராக அசீம் தேர்வு செய்யப்பட்டார், ஆனால் அந்த முடிவில் பலருக்கு பிடிக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.

சீரியல்களில் நடித்து வந்த அசீமிற்கு இப்போது படங்களில் நடிக்கும் வாய்ப்பு பிக்பாஸ் பிறகு கிடைத்துள்ளது.

பிக்பாஸ் 7வது சீசன் ஆகஸ்ட் மாதமே தொடங்கும் என சமீபத்தில் தகவல் வந்தது. தற்போது நமக்கு நிகழ்ச்சி குறித்து என்ன தகவல் வந்துள்ளது என்றால் போட்டியாளர்கள் குறித்து தான்.

விஜய் டிவி பிரபலங்களான தொகுப்பாளினி பாவனா, கலக்கப்போவது யாரு பிரபலம் நடிகர் சரத், மாகாபா, உமாரியாஸ் போன்றோர் போட்டியாளர்கள் லிஸ்டில் பேசப்படுவதாக கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.