நாடு முழுவதும் வாக்களிப்பு ஒத்திகை

நாடு முழுவதும் மேலும் 16 வாக்களிப்பு ஒத்திகைகளை எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொதுத் தேர்தலுக்கான முதலாவது தேர்தல் ஒத்திகை, கடந்த 07ஆம் திகதி அம்பலாங்கொடையில் இடம்பெற்றது.

வாக்கெடுப்பின்போது ஏற்படக்கூடிய பிரச்சினைகளை அடையாளம் காணும் வகையில், 200 இற்கும் மேற்பட்ட வாக்காளர்களுடன் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளின் கீழ் வாக்களிப்பு இடம்பெற்றது.

கொழும்பு நகரில் நகர்ப்புற குடியிருப்புகளிலும் தோட்டப் பகுதிகளிலும் 02 தேர்தல் ஒத்திகை நடவடிக்கைகளை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்தல் ஒத்திகைகளை ஒழுங்கமைப்பதற்காக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் ஏற்கனவே தேர்தல் கடமையில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதோடு, தேர்தல்கள் ஒத்திகை நடவடிக்கைக்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதான அலுவலக அதிகாரிகள் நிறுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.