வற்றாப்பளை மகாவித்தியாலயத்தில் தேசிய மொழிகள் வாரத்தின் மொழிகள் விழிப்புணர்வு கருத்தரங்கு!

பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாண சபை அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவினால் மொழிகள் வாரத்தில் மொழி உரிமைகள், அரச மொழிக் கொள்கை, அமுலாக்கம், இரண்டாம் மொழி கற்பித்தலின் முக்கியத்துவம் பற்றி நாடளாவிய ரீதியில் விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.

இதன் செயற்பாடாக முல்லைத்தீவு மாவட்டம் வற்றாப்பளை மகாவித்தியாலயத்தில் இன்றைய தினம் மு.ப.11.30 மணிக்கு பாடசாலை மாணவர்களுக்கு மொழிகள் அரச கரும மொழிகள் தொடர்பிலான கருத்தரங்கு நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில் பிரதம வளவாளராக பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாண சபை அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவின் உதவிச்செயலாளர் திரு. எஸ்.சத்தியசீலன் கலந்துகொண்டார்.

இதன்போது முல்லைத்தீவு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் திருமதி லிசோ கேகிதா, மாவட்ட மொழிகள் பிரிவின் இணைப்பாளர் தாமரைச்செல்வி, கரைதுறைப்பற்று பிரதேச செயலத்தினுடைய சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர்களான செல்வி சு.சிந்துகா, இ.அம்பாலிகா , பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.