யானையை மீளப்பெற்ற தாய்லாந்து 3 பறவைகளை இலங்கைக்கு வழங்கியது !

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான விலங்கு, பறவைகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் தாய்லாந்து அரசினால் அனுப்பி வைக்கப்பட்ட ‘கசோவரி’என்ற (Double-wattled Cassowary ) மூன்று பறவைகள் வியாழக்கிழமை (05) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நியைில் தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

வியாழக்கிழமை இரவு 11.10 மணியளவில் மலேஷியா ஏர்லைன்ஸ் MH-179 என்ற விமானம் மூலம் இரண்டு ஆண் கசோவரி பறவைகளும், சுமார் 9 மாத வயதுடைய ஒரு காசோவரி குஞ்சும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன.

சுமார் 5 அடி உயரமும் சுமார் 60 கிலோ கிராம் எடையும் கொண்ட இந்த cassowary பறவைகள் மிகவும் வண்ணமயமான இந்த பறவைகளால் பறக்க முடியாது என்பது விசேட இம்சமாகும்.

தாய்லாந்திலிருந்து விமானம் மூலம் வருகை தந்த கசோவரி பறவைகளை வரவேற்பதற்காக தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் கால்நடை வைத்தியர் தம்மிக தசநாயக்க உட்பட பலர் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.