ராஜஸ்தான் மாநில முதல்வர் வேட்பாளர் – காங்கிரஸ் முக்கிய முடிவு

ராஜஸ்தானில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்கப்போவதில்லை என்று காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

ராஜஸ்தானில் இந்தாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் இடையிலான மோதல் அக்கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.சி.வேணுகோபால், காங்கிரஸ் செயல்படுத்திய திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க தலைவர்கள் அறிவுறுத்தியதாக கூறினார். இந்நிலையில், ஆலோசனைக் கூட்ட புகைப்படங்களை டிவிட்டரில் பகிர்ந்த கார்கே, ராஜஸ்தான் மாநிலம் தொடர்ந்து முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் ராஜஸ்தானின் நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் காங்கிரஸ் கையில் பாதுகாப்பாக உள்ளது என்று கார்கே பதிவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.