சந்திரயான்- 3 திட்டம் வெற்றிபெற வேண்டி திருப்பதி கோயிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் வழிபாடு..!

சந்திரயான்- 3  திட்டம் வெற்றிபெற வேண்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் வழிபாடு மேற்கொண்டனர்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ நாளை மதியம் 2.45 மணிக்கு ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து சந்திரனை ஆய்வு செய்யும் சந்திரயான் 3 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த உள்ளது.

அதன்படி நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம், நாளை விண்ணை நோக்கி பாய உள்ளது. இந்நிலையில் ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில், சந்திரயான்-3 விண்கலத்திற்கான கவுன்ட் டவுன் இன்று மதியம் ஒரு மணிக்கு தொடங்கும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக இருபத்து ஐந்தரை மணி நேர கவுன்ட் டவுனுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன் படி, கவுன்ட்டவுன் முடிந்து வெள்ளிக்கிழமை மதியம் 2.35 மணி அளவில் சந்திரயான்-3 விண்ணில் ஏவப்படும். சந்திரயான்-3 திட்டத்தின் இயக்குநரான விழுப்புரத்தைச் சேர்ந்த வீரமுத்துவேல் தலைமையில் விண்ணில் ஏவுவதற்கான அனைத்து பணிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதற்கு தேவையான அனைத்து இறுதி கட்ட ஏற்பாடுகளும் துவங்கி நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் சந்திரயான் 3 செயற்கைக்கோள் மாதிரியுடன் இஸ்ரோ குழுவினர் இன்று காலை திருப்பதி கோயிலுக்கு சென்றனர்.

இத்திட்டம் வெற்றிபெற வேண்டி, திருப்பதியில் விஐபி டிக்கெட் மூலம் சாமி தரிசனம் செய்த விஞ்ஞானிகள் குழு, சந்திரயான் -3 செயற்கைக்கோள் மாதிரியை வைத்து வழிபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.