அதிரடியாக குறைந்த தக்காளி விலை

தமிழ்நாட்டில் தக்காளி விலை இன்று ரூ.25 வரை குறைந்து விற்பனையாகிறது.

கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து விற்பனையாகிறது. சென்னையில் 1 கிலோ தக்காளி 180 ரூபாய் வரை விற்பனையானதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர். தக்காளியோடு சேர்ந்து காய்கறிகளின் விலையும் கிடுகிடுவென உயர்ந்தது பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தொடர் மழையால் தக்காளி சாகுபடி குறைந்துள்ளது. தக்காளி விளைச்சல் அனைத்து மாநிலங்களிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தட்டுப்பாடு காரணமாக வட மாநிலங்களில் கிலோ 230 முதல் 260 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைந்ததே இந்த விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.

கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நாள் ஒன்றுக்கு 1100 டன் தக்காளி தேவை உள்ள நிலையில், இன்றைய தினம் வரத்து சற்று அதிகரித்தது. இதனால் தக்காளி விலை குறைந்து 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இதேபோல நவீன் தக்காளி 130 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 160 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 20 ரூபாய்க்கும், உருளைக் கிழங்கு 30 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Leave A Reply

Your email address will not be published.