கொரோனா தாக்கம் குறைய திருப்பதி வெங்கடேசப் பெருமாளிடம் விண்ணப்பம்…

திருமலையில் கொரோனா தொற்றிலிருந்து உலக மக்கள் நலம் பெற தேவஸ்தானம் கடந்த ஜூன் மாதம் முதல் சுந்தரகாண்ட பாராயணத்தை துவங்கி நடத்தி வருகிறது. 68 சர்க்கங்களை கொண்ட சுந்திரகாண்டத்தில் தற்போது, 14 சர்க்கங்களின் பாராயணம் நடந்து முடிந்துள்ளது.

3 அகண்ட பாராயணங்கள்  முடிந்துவிட்ட நிலையில், நேற்று சனிக்கிழமை காலை 12 சர்க்கம் முதல் 14ம் சர்க்கம் வரையிலுள்ள 146 ஸ்லோகங்கள் அகண்ட பாராயணம் நடை பெற்றது. 200 வேதபண்டிதர்கள் இணைந்து திருமலையில் உள்ள நாதநீராஜன மண்டபத்தில் அகண்ட பாராயணத்தில் ஈடுபட்டனர்.இவை அனைத்தும் தேவஸ்தானம் தனது தொலைகாட்சியான  SVBC  யில் நேரடி ஒளிபரப்பு செய்து வருகிறது.

இந்த அகண்ட பாராயணத்தின் போது, ராம நாமம் திருமலை முழுவதும் எதிரொலிக்க பக்தர்களும் கலந்து கொண்டனர்.

தேவஸ்தானம் இதுபோன்ற அகண்ட  பாராயணங்களை திருமலையில் நடத்தி வருகிறது. அதனால், உலக மக்கள் சுபிக் ஷமாகவும், ஆரோக்கியமாகவும் சகல ஐஸ்வர்யங்களையும் பெறுவார்கள்.

Leave A Reply

Your email address will not be published.