கேரளா அல்ல, இனி கேரளம்! மாநிலத்தின் பெயரை மாற்ற முடிவு!

கேரள மாநிலத்தின் பெயரை மாற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது.

கேரள மாநிலத்தின் பெயர் ஆங்கிலத்தில் கேரளா என்றே குறிப்பிடப்படுகிறது. இந்தப் பெயரை ‘கேரளம்’ என அனைத்து அதிகாரப்பூர்வ கோப்புகளிலும் மத்திய அரசு மாற்ற வேண்டும் என்று மாநில சட்டப் பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் இன்று தீர்மானம் தாக்கல் செய்கிறார்.

மாநில பெயர் மாற்ற தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று இன்றே சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, நேற்று கேரள சட்டப்பேரவையில் பொது சிவில் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.