பூமி, சந்திரனை படம்பிடித்த சந்திரயான் 3..!

சந்திரனின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், பூமி மற்றும் சந்திரனை படம்பிடித்து அனுப்பியுள்ளது.சந்திரனை ஆய்வுசெய்வதற்காக ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து கடந்த மாதம் 14-ஆம் தேதி செலுத்தப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், சந்திரன் வட்டப் பாதைக்குள் கடந்த 5-ஆம் தேதி நுழைந்தது. இதனைத் தொடர்ந்து, மூன்றாவது கட்டமாக சந்திரனில் வட்டப் பாதையின் உயரம், புதன்கிழமை குறைக்கப்பட்டது.

இந்நிலையில், விண்கலத்தில் உள்ள லேண்டர் இமேஜர் என்ற கேமரா, விண்ணில் செலுத்தப்பட்ட நாளில் பூமியை படம்பிடித்து அனுப்பியுள்ளது.இதேபோல, சந்திரனின் வட்டப் பாதைக்குள் நுழைந்ததற்கு அடுத்த நாளில் சந்திரனை Lander Horizontal Velocity Camera படம்பிடித்து அனுப்பியுள்ளது.

இந்த இரண்டு படங்களையும் இஸ்ரோ வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது. சந்திரயான்-3 விண்கலத்தின் அடுத்தகட்ட வட்டப் பாதை குறைப்பு நடவடிக்கையை, வரும் 14-ஆம் தேதி நண்பகலில் மேற்கொள்ள உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. மேலும், வரும் 23-ஆம் தேதி சந்திரனின் தென்துருவத்தில் விண்கலத்தை தரையிறக்க இஸ்ரோ திட்டமிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.