தீப்பிடித்து எரிந்த ரயில் பெட்டிகள்…பெங்களூருவில் பரபரப்பு!

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் விரைவு ரயிலின் 2 பெட்டிகள் தீப்பற்றி எரிந்த நிலையில், பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மும்பையில் இருந்து பெங்களூரு செல்லும் உத்யான் விரைவு ரயில், பெங்களூரு ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. அதிகாலை 5.45 மணிக்கு ரயிலின் எஞ்சின் பெட்டியான பி1 பெட்டி மற்றும் பி2 பெட்டிகளில் புகை வந்துள்ளது. உடனடியாக ரயிலில் இருந்த பயணிகள் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில், புகை மூட்டம் ரயில் நிலையம் முழுவதும் பரவியது. இதனால் அங்கிருந்தவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது.

இந்நிலையில் ரயிலின் கடைசி இரண்டு பெட்டிகள் மளமளவென தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்தன. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புப் படையினர், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் முன்னெச்சரிக்கையாக பயணிகள் அப்புறப்படுத்தப்பட்டதால், யாருக்கும் பாதிப்பில்லை என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.