தமிழக ஐஏஎஸ் அதிகாரி முகத்தில் மை வீச்சு..!

ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்னாயக்கின் தனி செயலாளராக உள்ள தமிழரான வி.கே. பாண்டியன் ஐஏஎஸ் மீது மை வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் மதுரையை பூர்விகமாக கொண்டவர் ஐஏஎஸ் அதிகாரி கார்த்திகேய பாண்டியன். இவர் ஒடிசாவில் முதலமைச்சர் நவீன் பட்னாயக்கின் தனி செயலாளராக பணியாற்றி வருகிறார். அந்த மாநிலத்தின் வளர்ச்சிப்பணிகளுக்காக 5Tஎன்ற துறை உள்ளது. இந்த பணிகளை ஆய்வு செய்யும் அதிகாரம் வி.கே. பாண்டியனுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பாண்டியன் வளர்ச்சிப்பணிகளை ஆய்வு செய்து வருகிறார். இந்நிலையில் புரி மாவட்டம் சத்யபாடியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, புரி மாவட்ட ஆட்சியர் சமரத் வர்மா ஆகியோர் சென்றனர். அப்போது ஒருவர், இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் மீதும் பேனா மை வீசினார்.

இந்த சம்பவத்தில் மைவீச்சுக்கு ஆளான பாண்டியன் துளியும் கோபப்படாமல் தாம் வந்த ஆய்வு பணிகளை செய்து வந்தார். அப்போது அங்கிருந்த பெண்கள் சிலர் பாண்டியனின் முகத்தில் இருந்த மையை துடைத்துவிட்டனர். மை வீசியதாக பாஸ்கர் சாஹூ என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.