மனைவியுடன் நேரில் ஆஜரான சீமான்

சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனது மனைவியுடன் நேரில் ஆஜரானார்.

பிரபல நடிகையான விஜயலட்சுமி கடந்த மாதம் 28ம் தேதி காவல் ஆணையர் அலுவலகத்தில் சீமான் மீது புகார் அளித்தார்.

அதில், சீமான் தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும், 7 முறை கர்ப்பமான நிலையில் கருச்சிதைவு செய்தார் என்றும் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக திருவள்ளூர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் விஜயலட்சுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சீமான் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் சீமான் இன்று விசாரணைக்கு வருவார் என கூறப்பட்டது, இதன்படி இன்று தன்னுடைய மனைவியுடன் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரானார்.

இவருடன் வழக்கறிஞர் உட்பட 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர், இதற்கிடையே நடிகை விஜயலட்சுமி தன்னுடைய புகாரை வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், தனது மனைவியும் வழக்கறிஞருமான கயல்விழியுடன் சீமான் இன்று மதியம் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக விசாரணை நடத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.