சூரியனை நெருங்கும் ஆதித்யா-எல்1

ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி வட்டப் பாதை 5ஆவது முறையாக இன்று அதிகாலை உயர்த்தப்பட்டது.சூரியனை ஆய்வு செய்வதற்காக கடந்த 2-ஆம் தேதி ஆதித்யா-எல் 1 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. பிஎஸ்எல்வி ராக்கெட்டில் இருந்து சரியாக 648 கி.மீ உயரத்தில் பிரிக்கப்பட்டு, புவியின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

இதனையடுத்து, ஆதித்யா-எல்1 விண்கலம் தனது இலக்கை நோக்கி தனது பயணத்தைத் தொடங்கியது.செப்டம்பர் 3, 5, 10 மற்றும் 15 ஆகிய தேதிகளில் 4 முறை சுற்றுவட்ட பாதை உயர்த்தப்பட்டது. குறைந்தபட்சம் 256 கிலோ மீட்டர் தொலைவும் அதிகப்பட்சம் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 973 கிலோ மீட்டர் தொலைவும் கொண்ட சுற்றுப்பாதையில் ஆதித்யா பயணித்து வந்தது.இந்நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில், 5ஆவது முறையாக விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை உயர்த்தப்பட்டது.

இதனை பெங்களூருவில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.அதன்படி, சூரியன்-பூமி டயில் லக்ராஞ்சியன் ஒன் எனப்படும் எல்-1 புள்ளியை நோக்கிய தனது பயணத்தை ஆதித்யா விண்கலம் வெற்றிகரமாக தொடங்கியுள்ளது.அடுத்த 110 நாட்களுக்கு பிறகு பூமிக்கும்-சூரியனுக்கும் இடையிலான எல்-1 புள்ளியில் இது நிலைநிறுத்தப்படும்.

இதற்கிடையே, அறிவியல் பூர்வமான தரவுகளை ஆதித்யா எல்-1 சேகரிக்கத் தொடங்கியதாகவும், அதில் உள்ள STEPS கருவி மூலம் அதிவெப்ப ஆற்றல்,அயனிகள் மற்றும் எலக்ட்ரான்களை அளவிட தொடங்கியுள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.