உதவி சுங்க அதிகாரி போட்டித் தேர்வுக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது!

இலங்கை சுங்க திணைக்களம், உதவி சுங்க அதிகாரி பதவிக்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது.

21 முதல் 35 வயதுக்குட்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை (GCE O/L)தேர்வில் ஆங்கில மொழியில் பெற்ற உயர் தேர்ச்சியும், கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் (GCE A/L) ஆங்கில மொழியில் சாதாரண தேர்ச்சியும் பெற்றிருப்பது அவசியம்.

இலங்கையின் போட்டித் தேர்வுகளில் ஒன்றான இந்தப் பரீட்சைக்கு 35 வயது வரையான பட்டதாரிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளமை விசேட நிகழ்வாகும்.

குறித்த பரீட்சைக்கான விண்ணப்பத்தை ஒக்டோபர் 16ஆம் திகதி வரையில் சமர்ப்பிக்கலாம் எனவும், பரீட்சை எதிர்வரும் டிசெம்பர் மாதம் நடத்தப்பட உள்ளதாகவும் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.