திருப்பதி மலையில் பேருந்து கடத்தல் – திடீர் பரபரப்பு !

திருப்பதி மலையில் பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக இயக்கப்படும் மின்சார பேருந்துகளில் ஒரு இலவச பேருந்தை இன்று அதிகாலை நேரத்தில் மர்ம நபர் கடத்தி சென்றது சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தேவஸ்தானம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், வழக்குப்பதிவு செய்து இலவச பேருந்தை ஓட்டி சென்ற நபரை தேடி கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பதி மலையில் பக்தர்களின் இலவச போக்குவரத்து வசதிக்காக தேவஸ்தான நிர்வாகம் 10 மின்சார பேருந்துகளையும், டீசல் மூலம் இயங்கும் சில பேருந்துகளையும் இயக்கி வருகிறது. அவற்றில் இரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தில் ஒரு பேருந்தை இன்று அதிகாலை முதல் காணவில்லை.

இந்த நிலையில் அந்த பேருந்தை மர்மநபர் ஒருவர் இன்று காலை 3 மணி அளவில் திருப்பதி மலையில் இருந்து திருப்பதிக்கு ஓட்டி சென்றதாக தெரியவந்துள்ளது. எனவே இது பற்றி தேவஸ்தான போக்குவரத்து துறை அதிகாரிகள் திருமலை போலீசில் புகார் அளித்துள்ளனர்.

புகார் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இலவச பேருந்தை இலவசமாக ஓட்டி சென்ற அந்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இலவச பேருந்தை ஓட்டி சென்றவர் எந்த வழியாக சென்றார் என்பதை கண்டுபிடிப்பதற்காக திருப்பதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் அனைத்து டோல்கேட்டுகளிலும் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.