பிகாரில் ஒரேநாளில் 12 பேர் நீரில் மூழ்கி பலி!

பிகாரில் உள்ள 6 மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 12 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

கயா மற்றும் அர்வால் மாவட்டங்களில் தலா மூன்று பேரும், தர்பங்காவில் இருவர், அவுரங்காபாத், சமஸ்திபூர், சுபால் மற்றும் ஜமுய் மாவட்டத்தில் தலா ஒருவரும் உயிரிழந்தனர்.

கயாவில் 2 சிறுமிகள் சங்கம் குமாரி(13), ரதிம் குமாரி (10) ஆகிய இருவரும் படவுரா கிராமத்தில் அமைந்துள்ள கால்வாயில் மூழ்கி இறந்தனர்.

சிறுமிகள் கால்வாய் அருகே விறகு கொண்டுவர சென்றதாக கிராம மக்கள் கூறினர். நீரில் மூழ்கிய சிறுமிகளை காப்பற்ற முயன்ற ரஹிம் கால்வாயில் தவறி விழுந்தார். அவர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதைக் கண்ட கிராம மக்கள், கால்வாயில் குதித்து மூன்று சிறுமிகளைக் காப்பாற்றினர். அதற்குள் சங்கமும், ரஹிமும் உயிரிழந்தனர்.

அர்வாலில் இரண்டு மைனர் இரட்டை சிறுவர்கள் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.
மேலும், ஒருவர் சோனே ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

Leave A Reply

Your email address will not be published.