சுரேஸ் சாலேவுக்கும், சஹ்ரானுக்கும் இடையே சந்திப்பு நடந்ததா? – யு.எச். ஹைதர் அலி

“சுரேஸ் சாலேவுக்கும், சஹ்ரானுக்கும் சந்திப்பு நடந்த எந்த ஆதாரமும்
இல்லை – ஒப்புக்கொண்டது சனல் 4”…….., என்ற செய்தியை இலங்கை அரசு ஆதரவு சிங்கள மற்றும் தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

ஜெனிவாவில் நடந்தது என்ன ?

இம்மாதம் (செப்டம்பர்) 21ம் திகதி ஜெனிவாவில் “இலங்கையின் ஈஸ்டர் குண்டுவெடிப்பு சம்பந்தமான Sri Lanka’s Easter Bombings: Dispatches ஆவணப்படம்” பலருக்காக மீள திரையிடப்பட்டது.

Director Thom Walker (left) and Executive Producer Ben de Pear at the private event held in Geneva.

இந்த ஆவணப்படத்தின் இயக்குனர் மற்றும் அதன் தயாரிப்பாளர் Thom Walker and Ben de Pear  ஆகியோருடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலின் போது பலர் தங்களுடைய கேள்விகளை  தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரிடம் தொடுத்தனர்.

Channel 4 வெளியாட்ட Sri Lanka’s Easter Bombings: Dispatches . ஆவணப்படத்தை பார்த்தவர்களுக்கு நன்கு தெரியும் அந்த ஆவணப்படத்தில் எந்த ஒரு இடத்திலும் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மற்றும் சஹரான் ஆகியவர்கள் சந்தித்துக் கொண்டார்கள் என்கின்ற விடயம் எங்கும் சொல்லப்படவும் இல்லை, காட்டப்படவும் இல்லை.

ஆவணப்படத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான் ) சிறையில் இருக்கும் போது , அங்கிருந்து பின்னர் விடுவிக்கப்பட்ட கைதிகளான  தேசிய தவ்ஹித் ஜமாத்தின் (தீவிரவாத கும்பலின்) உறுப்பனர்களான சஹ்ரானுடைய தம்பி மற்றும் ஆறு பேரை மேஜர் ஜெனறல் சுரேஷ் சலேவுக்கு புத்தளம் , வனாத்திவில்லுவில் அறிமுகப்படுத்தியதாக அன்சீர் அசாத் (மௌலான)குறிப்பிட்டுள்ளார்.

ஜெனிவா திரையிடலின் போது அங்கிருந்த  ஒரு ஊடகவியலாளர் “மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கும் சாஹ்ரானுக்கும் இடையிலான ஏதேனும் சந்திப்பு இடம் பெற்றதற்குரிய ஆதாரமும் உங்களிடம் இருக்கிறதா?” என கேட்கிறார்.

அதாவது இந்த ஆவணப் படத்தில் காட்டப்படாத ஒரு விடயம் சம்பந்தமாக கேள்வி கேட்கிறார். இது ஒரு மேல் அதிக தகவலுக்காக அவர் கேட்ட கேள்வியாக இருக்கலாம்.

அதற்கு பதில் அளித்த இந்த ஆவணப்படத்தின் இயக்குனர், “இது சம்பந்தமாக எதிர்காலத்தில் அமையப்போகும் ஒரு விசாரணை கமிஷன் உள்நாட்டு அல்லது வெளிநாட்டு விசாரணைகளின் ஊடாகவே தெரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒரு விடயம்” என்றார்.

ஏனெனில் இந்த விடயம்  ஆவணப்படத்தில் நாம் எங்கும் காட்டப்படாத / சொல்லப்படாத ஒரு விடயமாகும்.

இந்த விடயத்தை தான் , அரச ஊதுகுழல் ஊடகங்களும் , அரச ஆதரவு தமிழ்  இணைய தளங்களும் எழுதிக் கொண்டிருக்கின்றன.

– யு.எச். ஹைதர் அலி

Leave A Reply

Your email address will not be published.