4மணி நேரத்தில் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு பயணம்.

எதிர்வரும் ஓக்டோபர் 10 ஆம் திகதி நாளை முதல் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 8,9 திகதிகளில் சுங்கதுறை அதிகாரிகளின் சோதனையும் ஓட்டம் வெற்றிகரமாக நடைப்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் நாகை – இலங்கை இடையே பயணிக்க 18 சதவீத ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து 6500 இந்திய ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் பயணிகள் தங்களுடன் 40-50 கிலோ எடையுள்ள பொருட்களை கொண்ட செல்ல அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வருடம் ஐனவரி முதல் முழுமையான கப்பல் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

கப்பலில் 150 பயணிகள் பயணம் செய்யமுடியும் என்பதுடன் இரு வழி பயணக் கட்டணமாக 53,500 ரூபாயும் ஒரு வழி பயணக் கட்டணமாக 27,000 ரூபாயும் அறவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கேசன் துறையில் இருந்து நாகப்பட்டினம் கடலில் 60 கடல் மையில் தூரம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.