திருப்பதியில் முதலமைச்சர் மனைவி மொட்டை போட்டு வேண்டுதல்… சூடுபிடிக்கும் தெலங்கானா தேர்தல் களம்…!

தெலங்கானா முதலமைச்சரின் மனைவி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மொட்டை அடித்து சுவாமி தரிசனம் செய்தார்.

தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் மனைவி சோபா குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றார். அங்கு மொட்டை அடித்து காணிக்கை செலுத்தி எழுமலையானை வழிபட்டார். முன்னதாக திருப்பதி மலையில் தேவஸ்தானம் சார்பில் அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

தெலங்கானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. அதன்படி தெலங்கானாவில் நவம்பர் 30 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் டிசம்பர் 3 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

தெலங்கானா மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் மாநில முதலமைச்சரின் மனைவி மொட்டை அடித்து சுவாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.