இலங்கை வந்தடைந்தது ஜெய்சங்கர் குழு!

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமைந்துள்ள 23 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துகொள்ளும் இந்து சமுத்திர எல்லை நாடுகள் அமைப்பின் மாநாட்டில் கலந்துகொள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் இலங்கை வந்தடைந்தார்.

மாநாடு (11) கொழும்பில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் இன்று (10) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். அவருடன் இந்திய வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரிகள் மூவரும் வந்தனர்.

இந்தியாவின் புதுடில்லியில் இருந்து இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஐ.எப்.சி. 31 என்ற விசேட விமானம் மூலம் அவர்கள் (10) மாலை 05.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இராஜாங்க அமைச்சர் சுரேன் இராகவன், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பக்லே தலைமையிலான இந்தியத் தூதரகத்தின் அதிகாரிகள் ஆகியோர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் விசேட விருந்தினர் அறைக்கு வந்து ஜெய்சங்கர் குழுவை வரவேற்று அழைத்துச் சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.