எனக்கு விஜயைப் பிடிக்கும்; அப்பாவுக்கு ரஜினியைப் பிடிக்கும்! – மஹிந்தவின் மகன் நாமல் சொல்கின்றார்.

“எனக்குச் சினிமாவில் விஜயை மிகவும் பிடிக்கும். ஆனால், என்னுடைய அப்பாவுக்கு ரஜினியைப் பிடிக்கும்.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

இந்தியாவின் தந்தி ரி.வி.க்கு வழங்கிய நேர்காணலில் அரசியலுக்கு அப்பால் தொடுக்கப்பட்ட வினாவுக்குப் பதிலளிக்கும்போதே நாமல் ராஜபக்ஷ எம்.பி. மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

“எனக்கு கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை எப்பவும் பிடிக்கும்; யுவராஜையும் பிடிக்கும். இப்போது ரோகித் சர்மா, கோலி, பும்ரா ஆகியோரைப் பிடிக்கும். அதேபோல் சினிமாவில் விஜயை மிகவும் பிடிக்கும். ஆனால், என்னுடைய அப்பாவுக்கு ரஜினியைப் பிடிக்கும்” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.