அந்தரத்தில் நின்றுபோன ராட்சத ராட்டினம்: 20 பேர் மீட்பு

புது தில்லியில் உள்ள ராம்லில்லா அரங்கில் அமைக்கப்பட்டிருந்த மிகப்பெரிய ராட்சத ராட்டினம், சுற்றிக்கொண்டிருக்கும்போது திடிரென நின்றுபோனது. அதிலருந்து 20 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

4 குழந்தைகள், 12 பெண்கள் உள்பட 20 பேரை தில்லி தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும், யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. சுற்றிக்கொண்டிருந்த ராட்டினம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நடுவழியில் நின்றுபோன விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இது குறித்து தீயணைப்புத் துறையினர் கூறுகையில், புதன்கிழமை இரவு 11 மணிக்கு எங்களுக்கு தொலைபேசியில் அழைப்பு வந்தது. உடனடியாக விரைந்து சென்று ராட்சத ராட்டினத்தில் சிக்கியிருந்த 20 பேரை மீட்டோம் என்றனர்.

Leave A Reply

Your email address will not be published.