பிரசாதம் வாங்க முண்டியடித்த கூட்டம்: சிறுவன் உட்பட வயதான பெண்களுக்கு நேர்ந்த சோகம்

இந்திய மாநிலம் பீகாரில் துர்கா பூஜை பந்தலில் சிறுவன் உட்பட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் நவராத்திரி கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், பல்வேறு பொது இடங்களில் பூஜைக்கான பந்தல் அமைத்து, துர்க்கை அம்மன் சிலைகள் வைத்து பூஜைகள் செய்து வருகின்றனர்.

அதன்படி, பீகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில், ராஜா தளம் பகுதியில் உள்ள இடத்தில் பந்தல் அமைத்து பொதுமக்கள் பூஜை நடத்தி வந்தனர். அப்போது, அங்கு பிரசாதம் தருவதாக வந்த தகவலால் ஏராளமானோர் முண்டியடித்து சென்றனர்.

அப்போது, அந்த கூட்டத்தில் 5 வயது சிறுவன் கீழே விழுந்துள்ளார். சிறுவனை காப்பாற்ற 2 வயதான பெண்கள் அவரின் மீது விழுந்தனர். இதனால், கூட்ட நெரிசலில் மூவரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், இந்த நெரிசலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 13 பேர் காயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார், காயமடைந்தவர்களை உடனடியாக சத்தார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மேலும், உயிரிழந்த மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொன்டு சென்றனர்.

இதனையடுத்து, அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.