முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்.. மருத்துவர்கள் முக்கிய அறிவுரை

முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சில தினங்களாக உடல்நல குறைவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகின. முதல்வர் ஸ்டாலின் நேற்றைய தினம் சென்னை தலைமை செயலகத்தில் இரண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருந்த நிலையில் கடைசி நேரத்தில் அவை ரத்து செய்யப்பட்டது. மேலும் அண்ணா அறிவாலாயம் முதல்வர் வருவார் என்று எதிர்பார்த்து இருந்த போதும் அவர் அங்கும் செல்லவில்லை.

இந்நிலையில் இன்று சென்னை பெசன்ட் நகரில் நடப்போம் நலன் பெறுவோம் என்ற திட்டத்தை தொடக்கி வைக்க இருந்த நிலையில் அந்த நிகழ்ச்சியிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை. முதல்வரின் உடல்நிலையே இதற்கு காரணம் என்று தகவல்கள் வெளியான நிலையில் தற்போது அவை உறுதியாகி உள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இருமலும் சற்று உடல்நல பாதிப்பும் இருந்த நிலையில் தற்போது வைரஸ் காய்ச்சல் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அவர் சில நாட்களுக்கு ஓய்வில் இருக்க வேண்டுமென்றும் அவர்கள் கூறியுள்ளனர். மெட்ராஸ் ENT ஆராய்ச்சி தலைமை மருத்துவர் மோகன் காமேஸ்வரன் வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.