இலங்கையின் நெருக்கடிக்கு கோட்டா, மகிந்த, பசில் ஆகியோர் பொறுப்பு – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ உள்ளிட்டவர்களே காரணம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதன்படி, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவார்ட் கப்ரால், பேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஸ்மன், நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர்.ஆர்டிகல, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர, இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபை உறுப்பினர்கள் ஆகியோர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் என பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சந்திரா ஜயரத்ன உள்ளிட்டோர் தாக்கல் செய்த இரண்டு அடிப்படை உரிமை மனுக்கள் உச்ச நீதிமன்றத்தின் ஐவர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்த போதே உச்ச நீதிமன்றம் தீர்ப்பை இன்று வழங்கியது.

Leave A Reply

Your email address will not be published.