மகளின் திருமணத்திற்கு ஆசையாக சேர்த்த ரூ.2 லட்சம்: கரையான்கள் அரித்ததால் விவசாயி வேதனை!

இந்திய மாநிலம், ஆந்திராவில் மகளின் திருமணத்திற்காக இரும்பு பெட்டியில் சேர்த்து வைத்திருந்த ரூ.2 லட்சம் பணத்தை கரையான்கள் அரித்ததால் விவசாயி வேதனை அடைந்துள்ளார்.

ஆந்திரா மாநிலம், மன்யம் மாவட்டம் பார்வதிபுரம் அருகே உள்ள புத்தூரைச் சேர்ந்த விவசாயி ஆதி மூலம் லக்ஷ்மணா. இவர் தன்னுடைய மகளின் திருமணத்தை நடத்துவதற்காக சேர்த்த பணத்தை இரும்பு பெட்டியில் வைத்து பத்திரப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், திருமணத்திற்காக எவ்வளவு பணம் சேர்த்து வைத்துள்ளோம் என்பதை பார்ப்பதற்காக இரும்பு பெட்டியை திறந்து பார்த்துள்ளார். அப்போது தான் விவசாயிக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

அதாவது, பணம் சேர்த்து வைத்திருந்த பெட்டியில் கரையான்கள் தென்பட்டன. அவர், அந்த பெட்டியை தலைகீழாக கவிழ்த்து பார்த்த போது, அவர் சேர்த்து வைத்திருந்த ரூ.2 லட்ச ரூபாய் மொத்த பணமும் கரையான்கள் கடித்து துண்டு துண்டாக்கின.

அதை பார்த்தவுடன் என்ன செய்வதென்று தெரியாத விவசாயி, நான் எனது அறியாமையின் காரணமாக இப்படி செய்து நஷ்டம் அடைந்து விட்டேன். என் மகளின் திருமணத்திற்கு அரசு தான் உதவி செய்ய வேண்டும் என ஆதி மூலம் கோரிக்கையும் வைத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.