மாவீரர் வாரம் இன்று ஆரம்பம்! – வீரமறவர்களின் பெயர்கள் யாழில் திரை நீக்கம்.

மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் யாழ்ப்பாணத்தில் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது.

ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரைத் தியாகம் செய்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகவுள்ளது.

இதையொட்டி யாழ்ப்பாணம், நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்துக்கு முன்பாக அமைக்கப்பட்ட மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு இன்று மாலை 6 மணிக்குத் திறந்து வைக்கப்படவுள்ளது.

1982 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி முதல் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் தாயக மண்ணின் விடியலுக்காக வித்தாகியவர்களில் கிடைக்கப் பெற முடிந்த 24 ஆயிரத்து 379 மாவீரர்களின் பெயர்களை உள்ளடக்கிய கல்லறைகளையும் சில தகவல்களையும் உள்ளடக்கிய நினைவாலயம் உருவாக்கப்பட்டுள்ளது என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.