தீர்வை விரைந்து வென்றெடுக்க ஜனாதிபதியுடன் கைகோருங்கள் – தமிழ்க் கட்சிகளுக்குப் பிரதமர் அழைப்பு.

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து அவரின் கரங்களைப் பலப்படுத்தி அரசியல் தீர்வை விரைவாக வென்றெடுக்கத் தமிழ்க் கட்சிகள் முன்வர வேண்டும்.”

இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார் பிரதமர் தினேஷ் குணவர்த்தன.

அதைவிடுத்து வெளியில் இருந்துகொண்டு ஜனாதிபதியையும், அரசையும் தமிழ்க் கட்சிகள் சாடுவதால் எந்தப் பயனும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றின் சிரேஷ்ட ஊடகவியலாளருக்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சம்பந்தனையும் அவரின் கட்சியையும் நாங்கள் மதிக்கின்றோம். கஜேந்திரகுமாரையும் அவரின் கட்சியையும் நாங்கள் மதிக்கின்றோம். விக்னேஸ்வரனையும் அவரின் கட்சியையும் நாங்கள் மதிக்கின்றோம். ஆனால், இந்த மூன்று தரப்பினரும் வெளியில் இருந்துகொண்டு அரசியல் தீர்வு வேண்டும் என்று கோருகின்றார்கள். அவர்கள் அனைவரும் ஜனாதிபதியுடன் இணைந்து ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்தினால் தீர்வை விரைவில் வென்றெடுக்க முடியும். அவர்கள் வெளியில் தனித்தனியே நின்று கட்சி அரசியல் செய்வதால் மக்களுக்கு எந்தப் பயனும் கிடைக்காது. தீர்வை வென்றெடுக்கத் கிடைத்துள்ள அருமையான சந்தர்ப்பத்தைத் தமிழ்க் கட்சிகள் தவறவிடக்கூடாது.” – என்றார்.

1 Comment
  1. விஸ்வநாத ஐயர் மஹேஸ்வரசர்மா says

    ரணிலை நம்பமுடியாது ஜனாதிபதி தேர்தலில் வரும் பொழுது குற்றவாளிகளைப் பிடித்துத் தண்டனை (ராஜபக்ஷ குடும்பம்) குடுப்பான் என்று கூறி வந்த பின்பு அவர்களுக்கு பாதுகாப்பாக இருந்தார் நம்ப வேண்டாம்
    அத்தோடு 1983 கலவரத்தில் தமிழ் மக்களை அழித்த வரலாறும் மறக்கமுடியாது

Leave A Reply

Your email address will not be published.