மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் மோடி தொலைபேசியில் பேச்சு!

உத்தரகண்ட் சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் நலம் விசாரித்தார்.

உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டம் சில்க்யாரா அருகே சுரங்கத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் கடந்த 12-ஆம் தேதி சிக்கினர்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நடந்த மீட்புப் பணிகள் 17 நாள்கள் கழித்து செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக 41 பேரும் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு முழு உடல் பரிசோதனையும் மருத்துவமனையில் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 41 தொழிலாளர்களுடன் தொலைபேசி மூலம் நலம்விசாரித்தார்.

முன்னதாக செவ்வாய்க்கிழமை இரவு மீட்புக் குழுவினரை பாராட்டிய பிரதமர், “சுரங்கத்தில் இருந்து தொழிலாளர்கள் மீட்டது உணர்ச்சிபூர்வமானது. சுரங்கத்தில் இருந்து தொழிலாளர்களை மீட்க அயராது உழைத்த மீட்புக்குழுவினருக்கு பாராட்டுகள். தொழிலாளர்களின் மன உறுதியும் வலிமையும் ஊக்கம் அளிக்கிறது. தொழிலாளர்களின் குடும்பங்கள் காண்பித்த பொறுமையும் தைரியமும் மிகவும் பாராட்டத்தக்கது.” என்று தெரிவித்திருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.