நாளை முதல் காலையிலிருந்து குடிக்கலாம்… காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை மதுபான பார்கள் திறக்க அனுமதி.

நாளை (டிசம்பர் 09) முதல் மதுபானக் கடைகள் திறக்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா மது வரி திணைக்கள கட்டளைச் சட்டத்தின் 52ஆவது அதிகாரசபையின் 32-1 துணைப்பிரிவின் அதிகாரங்களுக்கு இணங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இம்முறை மாற்றத்தைச் செய்துள்ளார்.

அதன்படி, வெளிநாட்டு மதுபான சில்லறை விற்பனை உரிமத்தின் கீழ் உள்ள மதுக்கடைகள் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.

தவிர, அனுமதியற்ற சுற்றுலா வாரிய வளாகத்திற்குள் மது அருந்துவதற்கான நேரத்தை காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.