ரணில் சஜித் இரு துருவங்களை இணைக்க பேச்சுவார்த்தை ஆரம்பம்!

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித்தும் ரணிலும் இணைந்து போட்டியிடவுள்ளதாகவும் , அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இரு தரப்பிலிருந்தும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கத்தின் நம்பகத்தன்மை வாய்ந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனித்து போட்டியிடுவது எந்தக் கட்சிக்கும் பலனளிக்காது என்ற மதிப்பீட்டின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கடைசி வரை சம்மதம் தெரிவிக்கவில்லை.

ஆனால் கட்சியின் உயர்மட்ட பலமானவர்கள் குழு இது தொடர்பில் வலுவான நிலைப்பாட்டை எடுத்ததன் காரணமாகவே அவர் பேச்சுவார்த்தைக்கு அனுமதி வழங்க நேரிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சஜித் பிரேமதாச இந்த அணுகுமுறைக்கு உடன்படாவிட்டால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரசாரத்திற்கு ஆதரவளிக்க இக்குழு தயார் என தெரிவித்த நிலையில் , சஜித் தனது கட்சிக்கு அரசியல் வாய்ப்பை வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.

எதிர்வரும் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகவும், சஜித் பிரேமதாச பிரதமராகவும் நியமிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்புடனேயே இந்த பேச்சுவார்த்தைகள் இரு தரப்பினராலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இரு கட்சித் தலைவர்களும் இதுவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

இரு தரப்பு பிரதிநிதிகளும் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் சஜித்தும், ரணிலும் இணைவார்கள் அல்லது ஐக்கிய மக்கள் சக்தி கட்சி பிளவுபடும் நிலைக்கு செல்லும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1 Comment
  1. விஸ்வநாத ஐயர் மஹேஸ்வரசர்மா says

    ரணில் வேஸ்ட் இவருடன் யார் சேர்ந்தாலும் அவர்களின் பெயர் கெடும் ரணிலால் ஒன்றும் முடியாது சும்மா வள வள வென்று பேசத்தான் முடியும்

Leave A Reply

Your email address will not be published.