இலங்கைக் கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்ள வெளிநாட்டுக் கப்பல்களுக்கு அனுமதி இல்லை! – அரசு திடீர் அறிவிப்பு.

இலங்கைக் கடற்பரப்புக்குள் ஆய்வுகளை மேற்கொள்ள எந்தவொரு நாட்டின் கப்பலுக்கும் அனுமதி வழங்காதிருக்க இலங்கை அரசு தீர்மானித்துள்ளது.

இந்தத் தடை ஒரு வருட காலத்துக்குச் செல்லுபடியாகும் என்று வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கைக் கடற்பரப்புக்குள் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில் கப்பல்கள் பிரவேசிக்க முடியாத போதிலும், சேவைகள் மற்றும் வசதிகளைப் பெற்றுக்கொள்ள இலங்கைத் துறைமுகங்களுக்கு வருகை தர முடியும் என்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மற்றுமொரு விசேட ஆய்வுக் கப்பலை ஈடுபடுத்தி இலங்கைக் கடற்பரப்பின் விசேட பொருளாதார வலயத்தை ஆராய்வதற்கு சீனா, இலங்கையிடம் அனுமதி கோரியுள்ள பின்புலத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இம்முறை ஆய்வுகளுக்கு ‘ஷியாங் யாங் ஹோங் 03’ எனும் கப்பல் பயன்படுத்தப்படவிருந்தது.

இந்த ஆய்வு அடுத்த ஆண்டு ஜனவரி 5 ஆம் திகதி முதல் பெப்ரவரி 20 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் என்று சீனத் தூதரகம் எழுத்து மூலமாக அறிவித்திருந்தது.

இந்நிலையில், இலங்கை அரசின் மேற்படி அறிவிப்பால் சீனத் தூதரகம் கடும் அதிருப்தியடைந்துள்ளது என்று அறியமுடிகின்றது.

Leave A Reply

Your email address will not be published.