செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க தடையில்லை: உச்ச நீதிமன்றம்

தமிழகத்தில் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்கத் தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிக்க தடையில்லை என்று உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சராக நீடிக்கத் தடையில்லை என்று உயர் நீதிமன்ற எடுத்த நடவடிக்கை சரியானது என்றும் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று விசாரணையின்போது, உயர் நீதிமன்றம் சில அறிவுரைகளை அளித்த போதும், முதல்வர் அதனை ஏற்கவில்லை என்று என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பது தொடர்பாக முதல்வரே முடிவு செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கூறியிருந்ததையும் மனுதாரர் சுட்டிக்காட்டியிருந்தார்.

மேலும், அமைச்சரை பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு சரியானதே என்றும், இதில் தலையிடத் தேவையில்லை எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

இதன் மூலம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதில் இருந்த சிக்கல் விலகியிருக்கிறது என்று கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.