இலங்கை முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு ஆயுதப்படைகள் .

வைத்தியசாலை பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நோயாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளுக்கு முப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் கோரிக்கைக்கு அமைய முப்படையினரும் வைத்தியசாலைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை 06.30 மணி முதல் சுகாதார சேவையில் உள்ள வைத்தியர்கள் தவிர்ந்த 72 தொழிற்சங்கங்கள் 24 மணிநேர அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.

வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35,000 ரூபா DAT கொடுப்பனவை (DAT என்பது அரசாங்க வைத்தியர்களுக்கு வழங்கப்படும் கடமை இடைநிறுத்தம் மற்றும் போக்குவரத்து கொடுப்பனவு) அவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என கோரி தொழிற்சங்கங்கள் இந்த நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றன. அத்தியாவசிய நடவடிக்கைகள்.

எவ்வாறாயினும், இன்று காலை சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களுக்கான கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுகாதார அமைச்சருடன் இன்று நடக்கும் கலந்துரையாடலில் தாமும் பங்கேற்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.