எரிபொருட்களின் விலை அதிகரிப்பு.

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைத் திருத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 371 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 8 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 456 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விலை, 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 363 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 7 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 468 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றின் விலை 26 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 262 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.