அரச நிதி பற்றிய குழுவின் தலைவராக மீண்டும் ஹர்ஷ டி சில்வா நியமனம்!

அரச நிதி பற்றிய குழுவின் தலைவர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர ஹர்ஷ டி சில்வா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அரச நிதி பற்றிய குழுவுக்கான உறுப்பினர்கள் தெரிவுக்குழுவால் நியமிக்கப்பட்டிருப்பதுடன், இதன் தலைவராக கலாநிதி ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் இன்று சபாநாயகரால் சபையில் அறிவிக்கப்பட்டது.

இதற்கமைய செஹான் சேமசிங்க, சீதா அரம்பேபொல, சுரேன் ராகவன், அனுப பஸ்குவல், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சட்டத்தரணி ரவூப் ஹக்கீம், வஜிர அபேவர்தன, விஜித ஹேரத், மஹிந்தானந்த அலுத்கமகே, துமிந்த திஸாநாயக்க, சட்டத்தரணி சந்திம வீரக்கொடி , நாலக கொடஹேவா, நிமல் லான்சா, எம்.ஏ. சுமந்திரன், கவிந்த ஹேஷான் ஜயவர்தன, மயந்த திஸாநாயக்க, ஹர்ஷண ராஜகருணா, யூ.கே. சுமித் உடுகும்புர, மேஜர் பிரதீப் உந்துகொட, இசுரு தொடன்கொட , சட்டத்தரணி பிரேம்நாத் சி. தொலவத்த, சட்டத்தரணி மதுர விதானகே, எம். டப்ளியு. டீ. சஹன் பிரதீப் விதான ஆகியோர் இக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.