நவல்னியின் மரணத்திற்கு புடின் தான் காரணம் – பிடன் கூறுகிறார்.

ரஷ்ய எதிர்க்கட்சி அரசியல் தலைவரான அலெக்ஸி நவல்னியின் மரணத்திற்கு அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புட்டின் தான் காரணம் என அமெரிக்க அதிபர் ஜோ பிடன் குற்றம்சாட்டியுள்ளார்.

அலெக்ஸி நவல்னி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததாக அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

47 வயதான நவல்னி 2021 முதல் சிறையில் உள்ளார்.

அவர் சிறப்புரிமை மீறல், மோசடி மற்றும் நீதிமன்ற அவமதிப்பு ஆகியவற்றிற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் தீவிரவாத அமைப்பை நிறுவ நிதியுதவி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, அவருக்கு 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.