ஜனாதிபதி தலைமையில் 28, 29 இல் யாழ்., கிளிநொச்சி மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் எதிர்வரும் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெறும் இந்த விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் பல அமைச்சுக்களின் செயலாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களைத் தொடர்ந்து இரு மாவட்டங்களிலும் உள்ள காணி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் நடமாடும் சேவையும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான அறிவித்தல் சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சின் ஊடாக 2024.02.19 ஆம் திகதி கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.