இலங்கை மாணவர் டினாலின் மர்ம மரணம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்கள்.

இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கை மாணவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டினால் டி அல்விஸ் என்ற 16 வயதுடைய பாடசாலை மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Croydon உள்ள Whitgift விட்கிஃப்ட் பள்ளியில் படித்த, தினால் ஒரு சிறந்த மாணவர்.

பள்ளியில் சிறந்த கால்பந்து மற்றும் ரக்பி வீரரான டினால், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து உயர்கல்வி படிக்க விரும்பினார்.

இந்தக் கனவுகள் அனைத்தையும் சிதைத்து , 2022 அக்டோபர் 27 அன்று மரணம் அவனை தழுவிக் கொண்டது.

டினாலின் மரணம் தற்கொலை என்று தீர்ப்பளிக்கப்பட்டாலும், அதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைகள் தொடர்ந்தன.

அவனது நிர்வாண புகைப்படங்களை வெளியிட போவதாக, சிலர் விடுத்த மிரட்டல் காரணமாகவே டினால் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நபர் அல்லது இடம் தொடர்பில் குறிப்பிட்ட உண்மைகள் எதுவும் வெளியாகவில்லை எனவும் அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

இருப்பினும், விபிஎன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நைஜீரியாவிலிருந்து டினாலுக்கு இந்த செய்தி அனுப்பப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

சமூக ஊடகங்கள் மூலம் உரிய கப்பம் கோரிய நபர் அவருக்கு இரண்டு நிர்வாண புகைப்படங்களை அனுப்பியுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்கு முன்னர் இவர் எடுத்த இரண்டு புகைப்படங்கள் சந்தேகநபர்களின் கைகளில் சிக்கியுள்ளதாக புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.