முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கான நிர்வாகிகளை நடிகர் விஜய் நியமித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை நடிகர் விஜய் தொடங்கியுள்ளார். இதற்கான அதிகாரப்பூர் அறிவிப்பு கடந்த பிப்ரவரி 2ம் தேதி வெளியிடப்பட்டது. மேலும் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு வழிவகுப்பதுதான் தனது கட்சியின் இலக்கு என்றும் விஜய் கூறினார்.

இந்த கட்சியில் உறுப்பினர் சேர்க்கை பணிகள் விரைவில் தொடங்கும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, உறுப்பினர் சேர்க்கைக்கான அணியை நடிகர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பில், முதன்முறையாக மகளிர் தலைமையில் இந்த அணி உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

உறுப்பினர் சேர்க்கை அணியின் மாநிலச் செயலாளராக நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார். மாநில இணைச் செயலாளராக கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.என்.யாஸ்மின், மாநிலப் பொருளாளராக கோவை கணபதியைச் சேர்ந்த சம்பத்குமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாநில துணைச் செயலாளர்களாக மதுரை மாவட்டம், கருப்பாயூரணியைச் சேர்ந்த விஜய் அன்பன் கல்லணை, சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த எம்.எல்.பிரபு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய அணி விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் விஜய் அறிவித்துள்ளார்.

மேலதிக செய்திகள்

கனடாவில், கூரிய ஆயுதம்” அல்லது “கத்தி போன்ற பொருளால்” இடம்பெற்ற கொலை சம்பவத்தில் 4 குழந்தைகள் உட்பட 6 இலங்கையர்கள் பலி (திருத்தம்) – Video

சிறுமி பாலியல் வன்கொடுமை கொலைக்கு கண்டனம் – புதுச்சேரியில் இன்று முழு அடைப்பு

இந்தியாவின் முதல் ரோபோ டீச்சர் – கேரள தனியார் பள்ளியில் அறிமுகம்

Leave A Reply

Your email address will not be published.