கொலையாளிக்கு அனுதாபம் காட்டுங்கள் : தனுஷ்க விக்ரமசிங்க (குடும்பத்தை இழந்த கணவர் )

கனடாவின் ஒட்டாவாவின் தலைநகரான Barrhaven இல் கடந்த 6ஆம் திகதி புதன்கிழமை GMT நேரப்படி அதிகாலை 3.52 மணியளவில் , இலங்கைக் குடும்பம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் முழு உலகத்தையும் உலக ஊடக வலையமைப்பையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதன் பின்னணியை அலசுகிறது , இந்தக் கட்டுரை

கனேடிய , அண்மைக்கால வரலாற்றில் இவ்வளவு கொடூரமான மனிதப் படுகொலைகள் பதிவு செய்யப்படவில்லை. சுமார் ஒரு மில்லியன் மக்கள்தொகை கொண்ட தலைநகரான ஒட்டாவாவில், 2023 இல் 14 கொலைகள் மட்டுமே நடந்துள்ளன, இது முந்தைய ஆண்டில் 15 ஆக இருந்தது. ஆனால் படுகொலைகள் எதுவும் பதிவாகவில்லை. இக்குடும்பமானது எதிர்கால வாழ்வின் நல்ல கனவுகளுடன் மிக அண்மையில் இலங்கையிலிருந்து கனடாவிற்கு புலம்பெயர்ந்திருந்தது. சில ஊடகங்கள் ஒரு வருடமாகவும், சில ஊடகங்கள் 6 மாதங்களாகவும் என செய்தி வெளியிட்டிருந்தன.

இந்த படுகொலையில் இருந்து தனது உயிரை காப்பாற்றிய குடும்பத்தலைவரான தனுஷ்க விக்கிரமசிங்க கூறுகையில், தான் வேலை முடிந்து வீட்டிற்கு வரும் போது இந்த கொலைகள் அனைத்தும் நடந்துள்ளதாகவும், அதன் பின்னரே 19 வயதுடைய இலங்கை இளைஞன் என சந்தேகிக்கப்படும் இளைஞனது கையில் இருந்த கூரிய ஆயுதத்தை பறித்து எடுத்துக்கொண்டு, போலீஸ் அவசர எண்ணை அழைத்ததாகவும் , இதற்கிடையில், அந்த வீட்டில் இருந்து உதவி கோரி அலறல் சத்தம் கேட்டதாக அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர்.

தனுஷ்க விக்ரமசிங்க சாரதியாக பணிபுரிந்து வருவதாகவும், வீடுகளை துப்புரவு செய்யும் தொழில் ஒன்றை ஆரம்பிக்கும் யோசனையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தனுஷ்கவின் மனைவி தர்ஷனி டிலந்திகா ஏகநாயக்க, அவரது பிள்ளைகள் இனுகா விக்ரமசிங்க (7வயது) , அஷ்வினி விக்ரமசிங்க (4 வயது) , ரனயா விக்கிரமசிங்க (3 வயது) மற்றும் கனடாவுக்குச் சென்ற பின் பிறந்த கெல்லி விக்ரமசிங்க (2 மாத குழந்தை) ஆகியோர் கொலையாகியுள்ளனர் .

தனுஷ்காவின் குடும்பத்தைத் தவிர, அவர்களுடன் தங்கியிருந்த 40 வயதான அமரகோன் முதியேன்சலாகே காமினி அமரகோனும் இங்கு கொல்லப்பட்டுள்ளார். அவர் குறித்த தகவல்களில் தெளிவில்லாத போதும் , அவர் மணமானவர் என்றும் , 2 குழந்தைகள் இருப்பதாகவும் , அவர்கள் இலங்கையில் வசிப்பதை தவிர வேறு தகவல்கள் இல்லை.

கொலையைச் செய்ததாக சந்தேகத்தின் பேரில் வீட்டில் கைது செய்யப்பட்ட 19 வயதுடைய Fabrio de Soyza, Algonquin பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வந்துள்ளார் என்பதை அந்தக் கல்லூரியின் தலைவர் Claude Brule உறுதிப்படுத்தினார். இந்த மாணவர் கடைசியாக 2023 குளிர்காலத்தில் தனது படிப்பில் பங்கேற்றார் என்றும் , அதன்பின் Fabrio கல்லூரிக்கு வரவில்லை என கல்லூரியின் தலைவர்  தெரிவித்துள்ளார்.

இந்தக் குடும்பம் மிகவும் பக்தியுடன் வாழ்ந்து வந்ததாகவும், உதவி தேவைப்படும் எவருக்கும் உதவ எப்போதும் தயாராக இருந்ததாகவும், இந்தக் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள ஹில்டா ஜயவர்தனராமய என்ற பௌத்த விகாரையின் சுனித தேரர் தெரிவித்துள்ளார்.

தனுஷ்க விக்ரமசிங்கவின் உடல்நிலை குறித்து விசாரிக்க சுனித தேரர் வைத்தியசாலைக்குச் சென்றதாகவும், அவரது ஒரு விரல் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், மற்றுமொரு விரல் சத்திரசிகிச்சை மூலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தனுஷ்வின் முகத்திலும் வெட்டுக்காயங்கள் இருந்ததாக ஊடகங்களுக்கு தேரர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பெப்ரியோ சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் கனடாவிற்கு வந்து முதல் மாதத்தில் தனது வீட்டில் வசித்து வந்ததாக கொலையை செய்த இளைஞனின் அத்தையான அனுஷா டி சொய்சா தெரிவித்துள்ளார்.

அவர் மிகவும் அமைதியானவர் என்றும் நல்ல குணம் கொண்டவர் என்றும், வீடியோ கேம்களுக்கு அடிமையாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொலைச் சம்பவத்தில் உயிர் பிழைத்த தனுஷ்க விக்ரமசிங்கவும், இந்த இளைஞனும், அந்த இளைஞன் படிக்கும் கல்லூரியில் அறிமுகம் ஆகியோர் எனவும், அதன் பின்னரே அவர் தனுஷ்காவின் வீட்டிற்கு குடிபெயர்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு அவர் தனது உறவினர்களுடனான அனைத்து உறவுகளையும் நிறுத்திவிட்டார் என்றும் , தொலைபேசி எண்கள், சமூக ஊடக தொடர்புகள் போன்றவற்றைக் கூட புளோக் செய்திருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே 6 கொலைகள் மற்றும் கொலைமுயற்சி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஃபேப்ரியோ டி சொய்சாவிடம் கருணை காட்டுமாறு குடும்பத்தலைவர் தனுஷ்க விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கோரிக்கை மிகவும் ஆச்சரியமளிப்பதாக ஊடகங்களும் தெரிவித்துள்ளன.

இந்த கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. கொலை செய்யப்பட்டவனுக்குத்தான் இதன் உண்மையான நோக்கம் தெரியும். வெகுஜனக் கொலைகளைச் செய்ய வேண்டும் என்ற உந்துதல் ஒரேயடியாக எழுந்திருக்க முடியாது. வெகுநாட்களாகத் திட்டமிடப்பட்ட ஒன்றுதான்.

வீட்டு உரிமையாளர் வீட்டில் இல்லாததை எதிர்பார்த்து இதை செய்திருக்கலாம். இருப்பினும், அனைத்தும் சில காலத்திற்குள் வெளிப்படலாம், அதுவரை எங்களால் எதுவும் சொல்ல முடியாதுள்ளது.

தனுஷ்க விக்ரமசிங்கவின் மனைவி தர்ஷனி டிலந்திகா ஏகநாயக்கவின் தாயார் , ஒரு சமூக வலைத்தளத்துக்கு பேட்டியளிக்கும் போது , மகள் உயிரிழந்த தர்ஷனி டிலந்திகா ஏகநாயக்க கொழும்பு பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பட்டதாரியான இவர் தனியார் துறையில் முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றி வந்தவர் எனவும் , சிங்கள சமூகம் அழிந்து போவதால் , அதிக குழந்தைகளை தான் பெற வேண்டும் என அடிக்கடி சொல்வார் எனவும் தெரிவித்திருந்தார்.

நான்காவது குழந்தையைப் பெறுவதற்கு முன்னர் குடும்பம் சமீபத்தில் கனடாவுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.இந்த வீடு இரண்டு பள்ளிகளுக்கு அருகில் அமைந்துள்ளது. குழந்தைகள் அருகிலுள்ள கத்தோலிக்க பள்ளியில் படித்து வந்ததாக கூறப்படுகிறது.

சுனீத தேரோவின் கூற்றுப்படி, தனுஷ்கவின் குடும்பம் கிட்டத்தட்ட ஒரு வருடமாகத்தான் கனடாவில் வாழ்ந்துள்ளனர்.

தனுஷ்க முதன்முதலில் 2020 ஆம் ஆண்டு தனது படிப்பை முடித்துவிட்டு வேலைக்கான வீசாவை பெற்று அந்த பகுதிக்கு வந்ததாக தேரர் தெரிவித்துள்ளார்.

“மனைவியும் அவர்களது மூன்று குழந்தைகளும் கடந்த ஆண்டு கணவருடன் சேர்ந்தனர் எனவும் , மனைவி கனடா வந்தபோது அவள் கர்ப்பமாக இருந்தாள் எனவும் , தனுஷ்க ஊபர் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிகிறார்..அத்தோடு துப்பரவு பணிகளையும் செய்வதாக தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொல்லப்பட்ட ஆறாவது நபரான காமினி அமரகோன் (40) அண்மையில் இலங்கையிலிருந்து வந்து இக் குடும்பத்துடன் வசித்து வந்த உறவினர் ஆவார். தனது மனைவியும் இரண்டு சிறு பிள்ளைகளும் கொழும்பில் வசிப்பதாகவும், சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தேரர் தெரிவித்துள்ளார்.

தனுஷ்க விக்ரமசிங்கவின் குடும்பத்தினர் , கனடாவுக்கு வருவதற்கு முன் , Fabrio de Soyzaவுடன் ஒரு வீட்டில் தங்கியிருந்ததாகவும் , குடும்பத்தினர் வந்த பின்னரும் தங்களோடு வாழலாம் என தனுஷ்க தெரிவித்திருந்தமையால் , Fabrio de Soyzaவும் , அவர்களோடு வந்து தங்கியிருந்துள்ளார் என அறிய முடிகிறது.

Fabrio de Soyza வீட்டில் இருப்பதை தனுஷ்க விக்ரமசிங்கவின் மனைவி தர்ஷனிவிரும்பவில்லை என தனக்கு வருத்தமாக இருப்பதாக , தனுஷ்க , அவரது நண்பர் ஒருவரிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே சமயம் கொலையாளிக்கு அனுதாபம் காட்டுங்கள் என தனுஷ்க தெரிவித்துள்ள கருத்து சிந்திக்க வைப்பதாக உள்ளது?

இதன் பின்னணியை ஆராயும் போது , “Fatal attacks aimed at undermining sexual confidence” எனும் பாலியல் ஈகோ அழிவு கொலைகளா எனும் சந்தேகமே உருவாகிறது?

ஜீவன்

Leave A Reply

Your email address will not be published.