பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்த கோர விபத்தில் 10 பேர் பலி… ஜம்மு – காஷ்மீரில் பயங்கரம்

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை, ராம்பன் என்ற இடத்தில் மிக ஆபத்தான மலைப்பாதை வழியாக செல்கிறது. கடல்மட்டத்தில் இருந்து பல ஆயிரம் மீட்டர் உயரம் கொண்ட இந்த மலைப்பாதையில் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படுவது தொடர்கதையாகி உள்ளது. கடந்த மாதம் கார் ஒன்று இந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், சஷ்மா அருகே கோரவிபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. நள்ளிரவு 1.30 மணியளவில் மலைப்பாதையின் வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்த கார், பல அடி ஆழம் கொண்ட பள்ளத்தாக்கில் கவிழ்ந்து உருண்டு விழுந்தது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த 10 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து, கடும் மழைக்கும் இடையே அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். விபத்தல் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

மேலதிக செய்திகள்
நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்

ஐபிஎல் கிரிகெட் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது கே.கே.ஆர்.

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும் காண்பதே எதிர்பார்ப்பு அரசியலையும் விளையாட்டையும் தனித்தனியாக பேண வேண்டும்!

இனியும் தாமதிக்காது ஐனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் தமிழ் பொது வேட்பாளர் பற்றி தமிழரசு முடிவெடுக்கவில்லை – யாழில் சுமந்திரன் தெரிவிப்பு.

மே தினக் கூட்டத்தோடு தேர்தல் பிரசாரப் போர் ஆரம்பம்!

இந்தியாவில் படிக்காத இளைஞர்களை விட படித்தவர்களுக்கே வேலைவாய்ப்பு இல்லை – ஆய்வில் தகவல்

Leave A Reply

Your email address will not be published.