சுட்டெரிக்கும் கோடை வெயில் ; 19 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

நீலகிரி உட்பட 19 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிகமான வெப்பம் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. தொடர்ந்து தற்போது வறண்ட வானிலையை நிலவி வருகிறது. குறிப்பாக காலை 9 மணிக்கே வெயில் வாட்டி வதைக்கிறது.

வழக்கம்போல் கோடை வெயில் வெளுத்து வாங்குகிறது. அதோடு வழக்கத்துக்கு மாறாக தமிழ்நாட்டின் பல இடங்களில் வெப்பஅலையும் வீச தொடங்கி உள்ளது. இந்த கடும் வெயிலில் நடமாடுவது என்பது உடலுக்கு பிரச்சனையை ஏற்படுத்தலாம்.

எனவே பொதுமக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்வதை தடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்றும் , நாளையும்வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி ராணிப்பேட்டை ,வேலூர் ,திருப்பத்தூர் ,கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் ,தர்மபுரி ,கள்ளக்குறிச்சி, சேலம் ,நாமக்கல், ஈரோடு, நீலகிரி ,கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இன்று வெயில் சுட்டரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூர் ,திண்டுக்கல், திருச்சி ,பெரம்பலூர் ,அரியலூர் மாவட்டங்களில் வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் கொடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுத்துள்ளது.

மேலதிக செய்திகள்

பூங்கதவு மூடிக் கொண்டது : பாடகி உமா ரமணன் மறைந்தார்

எதிர்வரும் மே தினம் எமது அரசாங்கத்தின் கீழ் கொண்டாடப்படும் – அனுர

கின்னஸ் சாதனையைப் படைக்க அனைவரும் தலைதெறிக்க ஓடிய போது , நான் பொறுப்பெற்றேன் – ரணில் விக்கிரமசிங்க

48 மணி நேரம் தேர்தல் பரப்புரை… தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவுக்கு தடை!

Leave A Reply

Your email address will not be published.