‘ விமான நிலைய விசா வழங்குதல் தகராறு ‘ : இந்தியாவுக்கு சம்பந்தம் இல்லை

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்குவது குடிவரவுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது, இது ஒருபோதும் தனியார் நிறுவனத்திற்கு அவுட்சோர்ஸ் செய்யப்படவில்லை என்று இலங்கையின் உயர் அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை தெரிவித்தார்.

“தயாரிப்பு விடயங்களை கையாள்வது மாத்திரமே அவுட்சோர்ஸ் செய்யப்பட்டுள்ளது” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளர் டினூக் கொலம்பகே தெரிவித்தார்.

விமான நிலையத்தில் நீண்ட வரிசைகளை சித்தரிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

இலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது மனைவியின் ஆன்-அரைவல் விசா ரத்து செய்யப்பட்டதாகக் கூறி, இந்திய விசா வழங்கும் அதிகாரிகளைக் குற்றம் சாட்டினார்.

உள்ளூர் பணியாளர்களை புறக்கணித்து, இந்திய நிறுவனங்களை இலங்கையில் இயங்க அனுமதித்ததற்காக இலங்கை அரசு மீது அவர் குற்றம் சாட்டினார்.

ஆனால் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் வியாழக்கிழமை பின்வரும் அறிக்கையை வெளியிட்டது.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) விசா வழங்குவதை இந்திய நிறுவனங்கள் மேற்கொள்வது தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் பேச்சாளரின் அறிக்கையில் ,

“கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் (BIA), இந்திய நிறுவனங்கள் விசா வழங்குவதைப் பற்றி சமூக ஊடகங்கள் உட்பட அறிக்கைகள் மற்றும் கருத்துகளை நாங்கள் பார்த்தோம்.

இந்த அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்கள் இந்தியாவை அடிப்படையாகக் கொண்டவை அல்லது இந்திய நிறுவனங்களைச் சார்ந்தவை அல்ல, அவை வேறு இடங்களில் தலைமையிடமாக உள்ளன. இந்தச் சூழலில் இந்தியாவைப் பற்றிய எந்தக் குறிப்பும் தேவையற்றது என்றார் அவர்.

Leave A Reply

Your email address will not be published.