அரபு சிறைகளில் இருந்த 44 இலங்கையர்களுக்கு அரச மன்னிப்பு.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் சிறைச்சாலைகளில் இருந்த 44 இலங்கையர்களுக்கு ஏப்ரல் மாதம் ரமழான் மாதத்திற்கான அரச மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிவிவகார அமைச்சு அபுதாபியிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக அமைச்சின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச மன்னிப்பு பெற்ற 44 இலங்கையர்களை எதிர்வரும் காலங்களில் பத்திரமாக இலங்கைக்கு அனுப்புவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகம் அந்நாட்டு அதிகாரிகளை ஒருங்கிணைக்கும் எனவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதுவர் திரு.உதய இந்திரரத்ன ஐக்கிய அரபு இராச்சிய அரசாங்கத்திற்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.