இராவணன் மீண்டும் எழுவானா? – (உபுல் ஜோசப் பெர்னாண்டோ)

போர் முடிந்த பிறகு ராமாயணம் மீண்டும் புத்துயிர் பெற்றது

வரலாற்றாசிரியர் கலாநிதி மிராண்டோ ஒபேசேகரவின் கூற்று வேடிக்கையாகத் தோன்றினாலும் . போர் முடிந்த பிறகு ராமாயணம் புத்துயிர் பெற்றது. காரணம், போரின் போது இராமாயணம் தொடர்பான பெரும்பாலான பகுதிகள் புலிகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. அவை அவர்களது கட்டுப்பாட்டிற்கு உட்பட்டதாக இருந்தது. இதன் காரணமாக ராமாயண தலத்தை பார்க்க விரும்பும் இலங்கை மற்றும் இந்திய சுற்றுலா பயணிகள் அந்த பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. போர் முடிவுக்கு வந்த பிறகு, ராமாயண தலத்தைக் காண இந்திய சுற்றுலாப் பயணிகள் மீண்டும் இலங்கைக்கு வந்தனர்.

டாக்டர் மிராண்டோ விடுதலைப் புலிகள், போருக்குப் பின் மீண்டும் ராவணன் அவதாரமாக எழுவார்கள் எனக் கூறினாலும், வடக்கில் உள்ள தமிழ் மக்கள் பிரபாகரனை ராவணனின் ஆவி என்றே நினைத்தனர். பிரபாகரன் இந்தியாவுடன் மோதலுக்குச் சென்று இந்தியத் தலைவர் ராஜீவ் காந்தியைக் கொன்றது முக்கிய காரணம். இராவணனின் சகோதரன் விபீஷணன் இராவணனுக்கு எதிராக இராமனை ஆதரித்து இராவணனை அழித்ததைப் போல சிங்கள அரசு, இந்தியாவிடம் உதவி பெற்று பிரபாகரனைக் கொன்றது என்று நம்பினர்.
இந்திய அமைதி காக்கும் படையினரை விலகச் சொல்லி பிரேமதாசா மிரட்டிய போது, ​​அவரது பிரச்சார ஆலோசகர்கள் பிரேமதாசாவை ராவண அவதாரம் என்று அழைத்தனர்.

இலங்கையில் ராவணனாக மாற நினைத்த பல தலைவர்கள் இந்தியாவுக்கு சவால் விட்ட தலைவர்கள். ரணசிங்க பிரேமதாச 1988 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட போது , அவரது இலக்கிய ஆலோசகர் சாகித்யதர அரிசன் அஹுபுது சக்வித்தி, ராவணன் என்ற நாடகத்தை தயாரித்து பிரேமதாசவின் சகாப்தம் இராவணன் சகாப்தமாக இருக்கும் என்பதை மறைமுகமாகக் காட்டினார். இந்திய அமைதி காக்கும் படையை நாட்டை விட்டு வெளியேறுமாறு பிரேமதாசா மிரட்டிய போது, ​​அவரது பிரச்சார ஆலோசகர்கள் பிரேமதாசாவை ராவண அவதாரம் என்றே அழைத்தனர்.

அதன் பின்னர் மகிந்த ராஜபக்சவை ராவணனாக ஆக்கி பேசினர். மகிந்த பிரபாகரனை அழித்து சீனாவை அருகில் கொண்டு வந்து இந்தியாவுக்கு சவால் விட்ட போது மகிந்தவின் பிரச்சார ஆலோசகர்கள் மகிந்தவை ராவணனின் சமீபத்திய அவதாரம் என்றனர்.
கோட்டா அதிபரானதும் சாலையோர சுவர்களில் பல இளைஞர்கள் ராவணன் உருவத்தை வரைந்தனர்.

இலங்கையில் மகிந்த தோற்கடிக்கப்பட்டு, ஊழல் குற்றச்சாட்டில் கோத்தபாய இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது மீண்டும் இராவண வெறி பரவியது. இராவணா பலய (சக்தி) என்ற அமைப்பு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை சுற்றிவளைத்து கோட்டாவுக்கு ஆதரவை தெரிவித்தது. இதற்குப் பின் பல்வேறு பெயர்களில் ராவண அமைப்புகள் உருவாகின. இந்த அமைப்புகள் கோட்டாபயவை ஜனாதிபதியாக்க பெரும் சேவையை செய்தன. கோட்டா அதிபராக பதவியேற்ற பிறகு பல இளைஞர்கள் ராவணன் உருவத்தை தெருக்களில் சுவர்களில் வரைந்தனர். அவர்கள் கோட்டாவை இந்தியாவின் அச்சமற்ற தலைவராகப் பார்த்தார்கள்.

ஆனால் ராவணனின் அவதாரமாக மாற நினைத்த தலைவர்களின் முடிவு  சோகமானவை. பிரேமதாசா கொல்லப்பட்டார். பிரபாகரன் கொல்லப்பட்டார். மகிந்தவும், கோட்டாவும் ஆட்சியை விட்டு ஓடி உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியதாயிற்று.

இலங்கை செய்ய வேண்டியது ராவணன்களை உருவாக்குவதல்ல, இராமாயணப் பாதை மூலம் இந்திய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு ஈர்ப்பதாகும்

ராவணன் ஆவி இலங்கைக்கு நல்லதல்ல. காரணம் ராவணன் கதை ஒரு கட்டுக்கதை. இலங்கை செய்ய வேண்டியது இராவணன்களை உருவாக்குவதல்ல, இராமாயணப் பாதை மூலம் இந்திய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு ஈர்ப்பதாகும். இந்திய சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் லிட்டில் இந்தியா என்ற சிறிய நகரத்தை சிங்கப்பூர் உருவாக்கியுள்ளது. இந்திய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் இலங்கையில் ராமாயணம் மற்றும் பௌத்தம் ஆகிய இரண்டும் உள்ளன. இந்த இரண்டு பாதைகளையும் இந்தியா ஊக்குவிக்க விரும்புகிறது. இந்தியப் பிரதமர் மோடியின் ராம் தேவோலா, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் இந்திய இராஜதந்திர விவகாரங்களுக்கு ராமாயணத்தை ஊக்குவிப்பது இலங்கைக்கு நல்ல வாய்ப்பாகும். ராவணன் உதயமாகும் வரை காத்திருக்காமல் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது இலங்கையின் பொறுப்பு.

(உபுல் ஜோசப் பெர்னாண்டோ)
மூத்த அரசியல் ஆய்வாளர் மற்றும் ஊடகவியலாளர்
தமிழில் : ஜீவன்

Leave A Reply

Your email address will not be published.