யாழ். போதனா வைத்தியசாலைக்குள் மதுபோதையில் சண்டித்தனம்! – மூவர் கைது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் மதுபோதையில் நுழைந்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டுக் குழப்பத்தில் ஈடுபட்ட மூவர் (25) கைது செய்யப்பட்டனர்.

வைத்தியசாலையில் நோயாளிகளைப் பார்வையிடும் நேரம் முடிந்த பின்னர் தம்மை உள்நுழைய அனுமதிக்குமாறு பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டுக் குழப்பத்தில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

வைத்தியசாலை நிர்வாகம் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்த நிலையில் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அண்மைக்காலமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்து மதுபோதையில் குழப்பத்தில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.