காலி முகத்திடலில் அனுமதியின்றி ஒரு கோலாகல திருவிழா.

காலி முகத்திடலில் அங்கீகரிக்கப்படாத குழுவொன்று பலவந்தமாக திருவிழா நிகழ்வு ஒன்றை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

துறைமுக அதிகாரசபையின் கட்டுப்பாட்டில் உள்ள காலி முகத்திடலை சமய நிகழ்வுகள் தவிர வேறு எந்த நிகழ்விற்கும் பயன்படுத்த அனுமதிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்ட நிலையிலேயே இந்த விழா நடத்தப்படுகிறது.

இதனை உடனடியாக நிறுத்துமாறு துறைமுக அதிகாரசபை அதன் ஏற்பாட்டாளர்களுக்கு அறிவித்துள்ள போதிலும் அதனை பொருட்படுத்தாது பலவந்தமாக கோலாகலமாக திருவிழா ஒன்று நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வியாழன் 23ஆம் திகதி ஆரம்பமாகி நேற்று நான்காவது நாளாக தொடர்ந்தது.

இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க துறைமுக அதிகாரசபை நடவடிக்கை எடுத்து வருகிறது.

காலி முகத்திடலில் இடம்பெற்ற அரகலய போராட்டத்தின் பின்னர், மத நோக்கங்கள் அன்றி வேறு எதற்கும் காலி முகத்திடலை வழங்குவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.