கள்ள உறவுகள் காரணமாக 23 வயதுடைய மனைவி கொலை : கணவனும் கள்ள 2 காதலிகளும் கைது.

நேற்று முன்தினம் (27) முல்லைத்தீவு பூட்டன்வயல் கிராமத்தில் உள்ள கிணற்றில் குதித்து பெண்ணொருவர் தற்கொலை செய்துகொண்டதாக , அவரது கணவர் பொலிஸில் முறைப்பாடு செய்த போதிலும், அது கொலை என பின்னர் தெரியவந்ததையடுத்து சம்பவம் தொடர்பில் கணவர் உட்பட பெண்கள் இருவரை முள்ளியவளை பொலிஸார் நேற்று (27) கைது செய்துள்ளனர்.

வவுனியாவை வசிப்பிடமாகக் கொண்ட 23 வயதுடைய எஸ். சுதர்சன்னி என்ற மரணமான பெண் முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துள்ளார்.

இவர்கள் முல்லைத்தீவு பகுதியில் வசித்து வந்த நிலையில், அவரது கணவர் , அப்பகுதியில் உள்ள மேலும் இரு பெண்களுடன் தொடர்பு கொண்டு அந்த பெண்களின் அல்லது ஒருவரது வார்த்தைகளுக்கு மயங்கி , சொந்த மனைவியின் கழுத்தை நெரித்து கொன்று கிணற்றில் சடலத்தை வீசியுள்ளதாக தெரியவருகிறது.

மனைவி கிணற்றில் விழுந்து விட்டதாக கணவர் அலறிக் கொண்டிருந்த போது, ​​சிலர் வந்து மனைவியைத் தூக்கிக் கொண்டு முள்ளியவளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே இறந்துள்ளமை தெரியவந்துள்ளது.

பிரேத பரிசோதனையில் பெண் கிணற்றில் விழுவதற்கு முன்னரே , மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளார் என வைத்தயர் வழங்கிய மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் , முள்ளியவளை பொலிஸார் கொலை என சந்தேகித்து கணவரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தியதில் உண்மை சம்பவம் தெரியவந்துள்ளது.

கொலை செய்த நபருடன் , கள்ள உறவில் ஈடுபட்ட இரு பெண்களையும் கைது செய்து போலீசார் விசாரணை செய்தபோது, உயிரிழந்த பெண்ணின் கொலையுடன் சம்பந்தப்பட்ட கணவனுடன், கள்ள உறவில் ஈடுபட்ட இருவருக்கும் அல்லது ஒருவருக்கு தொடர்பு இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கொலையுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் கணவர் மற்றும் கள்ள உறவில் ஈடுபட்ட இரு பெண்களையும் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முள்ளியவளை பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.